
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கூறியிருப்பதாவது:-வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனை யுமான பிரியா வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் கொளத்தூர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதால், உடலின் ரத்தநாளங்கள் பழுதடைநது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது கால் நீக்கப்பட்டது இதையடுத்து உறுப்புகள் செயல் இழந்து பிரியா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வேதனை னயையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத்திடலின் சீரற்ற தன்மையின ல் விளையாடுகின்றபோது மூட்டு சவ்வு விலகுவது என்பது இயல்பான ஒன்று. அது சரியான மற்றும் முறையான சிகிச்சையால் எளிதில் சரிசெய்து கொள்ளலாம் ஆனால், அரசு மருத்துவமனை வீராங்கனை பிரியாவிற்கு வழங்கிய மேம்போக்கான தவறான சிகிச்சை அவரது உயிரையே பறித்துள்ளது. அரசு மருத்துவமனை களில் ஏழைகள் என்றாலே மெத்தனமாக சிகிச்சை அளிக்கப்படுவதும். அவர்களின் உயிர் துச்சமாக எண்ணப்படுவதும் புதிதாக நிகழும் ஒன்றல்ல. கடந்த காலங்களில் எத்தனையோ பேர் இதேபோன்று அலட்சி யமான தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர்.காலங்காலமாக மருத்துவ மனைகளில் தவறான சிகிச்சைகளால் ஏழைகளுக்கு தொடரும் இந்த அநீதி, சகோதரி பிரியாவின் மரணத்திற்கு பிறகாவது இது போன்ற நிகழாவண்ணம் அரசு கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தவறு செய்யும் மருத்துவர்கள் மிகக்கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆறுதல் சொல்வதன் மூலம் நிவாரணத்தொகை வழங்குவதன் மூலமோ ஓர் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. மருத்துவர்களின் மெத்தனப்போக்கால், எதிர்காலத்தில் இந்த தேசத்திற்கு பெருமைசேர்க்க காத்திருந்த பிரியா என்னும் ஓர் மதிப்புமிக்க வீராங் கனையை தமிழகம் தற்போது இழந்துள்ளது என்பதை மருதது வத்துறையினர் நினைவில்கொண்டு வருங்காலங்களிலாவது பொறுப்புடனும், எச்சரிக்கை யுணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கூறியுள்ளார்.