மரக்காணம் அருகே கடல் சீற்றம்- நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி; கிராம மக்கள் சோகம்.!

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). இவர் இன்று அதிகாலை வழக்கம்போல் தனதுக்கு சொந்தமான நாட்டுப்படையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரது நாட்டு படகு கடலில் மூழ்கியது. இதனைப்பார்த்த அருகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரது நாட்டுப்படகு மூழ்கியின் காரணமாக ரங்கநாதனும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் காவல்துறையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடல் சீற்றம் குறையும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *