
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மனை பட்டா இல்லாமல் இருந்த வெள்ளையூர் JJ நகரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மனைப்பட்டா வழக்கத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடத்தப்பட்டது இதில் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மூர்த்தி மாவட்ட பொருளாளர் சிவபெருமான் மாவட்ட மாணவரணி செயலாளர் அரிகிருஷ்ணன் தொகுதி தலைவர் பொன்னரங்கம் தொகுதி செயளாலர் ஆரோக்கியசெல்வம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏழுமலை, சத்தியமூர்த்தி, சாதிக் மற்றும் இதில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஐயாசாமி அவர்களும் கடலூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாக்யராஜ், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் இறுதியாக வட்டாட்சியர் இரண்டு தினங்களில் மனை பட்ட வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளையூர் JJ நகர் கிராமம் மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.