மத்திய மாநில அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மக்கள் வேதனை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று 19/12/22 மத்திய, மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களை பெரும் பொருளாதாரச் சுமையில் வாட்டி வதைக்கும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், பால்நிலை, மின் கட்டண உயர்வு, புதிய மோட்டார் வாகனச் சட்டம், ஆகியவற்றை திரும்ப பெறவும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் உத்திராபதி அவர்களின் தலைமையில் மக்கள் வேதனை போராட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் வரவேற்பு உரை ஆற்றினார் மாவட்ட துணைத்தலைவர் கலியபெருமாள் மற்றும் மாவட்ட செயலாளர் சத்குரு முன்னனிலை வகுத்தனர். இதனை தொடர்ந்து மாநில துணைத் தலைவர் கே.ராஜவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், மாநிலச் செயலாளர் காமராசு, திருவள்ளுவன், மாண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், பழங்குடி இருளர் கூட்டமைப்பு தலைவர் இருளபூ.செல்வக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, ராம்குமார், ஆகியோர்கள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விருது போக்கை கண்டித்து கண்டன உரை ஆற்றினார் தொகுதி தலைவர் அர்ஜுனன் நன்றி உரை கூறினார் மேலும் இதில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *