மத்திய பட்ஜெட் 2023-2024 முக்கிய அம்சங்கள்; மத்திய பட்ஜெட் ஏழை எளிய மக்கள் நிலை மாற்றம் அடையுமா.?

புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24 பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு வாழ தரத்தை உயர்த்துமா? தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஒரு பார்வை….

• சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேற்றம்

  • உணவு தானிய வினியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி ரூபாய் கடன் இலக்கு.
  • மீனவர் நலத்திட்டம் 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • தோட்டக்கலை துறைக்கு 2200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பழங்குடியினர் மேம்பாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்
  • பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் 1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மூலதன முதலீடுகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்.
  • நகர உட்கட்டமைப்பு திட்டம் 10ஆயிரம் கோடி ரூபாய்
  • போக்குவரத்து திட்டம் 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • ‘இ – நீதிமன்ற’ங்களுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மாற்று எரிசக்திக்கு 19 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பசுமை எரிசக்தி மேம்பாட்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • லடாக்கில் 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயில் பசுமை எரிசக்தி ஆலை அமைக்கப்படும்
  • இளையோர் மேம்பாடு திறன் மேம்பாட்டுத் திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் 9000 கோடி ரூபாய்.
  • தேசிய ஹைட்ரஜன் மிஷன் திட்டம் 19 ஆயிரத்து 700 கோடி ரூபாய்.
  • கோவர்தன் – பசு திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • நாடு முழுதும் டிஜிட்டல் நுாலகங்கள்.
  • நாடு முழுதும் 157 புதிய நர்சிங் கல்லுாரிகள்.
  • ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் நியமிக்க திட்டம். ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி அளிக்க திட்டம்.
  • 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
  • ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழு அமைக்க திட்டம்.
  • நாட்டின் மூன்று உயர் கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு நுட்ப சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கே.ஒய்.சி. நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.
  • மத்திய – மாநில அரசுகளின் திட்டம் சேவைகளை பெற ‘ஆதார் பான் கார்டு’ அடையாள ஆவணங்களாக அறிவிப்பு.
  • ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள்.
  • 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் ‘பயோ இன்புட் ரிசோர்ஸ்’ மையங்கள் அமைக்கப்படும்.
  • சுற்றுலாவை மேம்படுத்த 50 புதிய நகரங்கள் அடையாளம்.
  • தேசிய தொழில் பயிற்சியாளர் திட்டம் அறிமுகம்.
  • 2023 – 24 நிதியாண்டில் 12.31 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு.
  • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள்.
  • மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வரம்பு 15 லட்சத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.
  • 7.5 சதவீத வட்டியில் மகளிருக்கான சிறுசேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும்.
  • டிவி பேனல் 2.5 சதவீதம் மொபைல் போன் உதிரி பாகங்களுக்கு சுங்க வரி 23 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைப்பு.
  • கிச்சன் சிம்னிகளுக்கான சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து இருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.
  • இறக்குமதி செய்யப்படும் சைக்கிள் பொம்மைகளுக்கான சுங்க வரி குறைப்பு.
  • தங்கம் வைரம் வெள்ளியின் சுங்க வரி உயர்வு.
  • புகையிலை பொருட்கள் மீதான வரி 16 சதவீதம் உயர்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
  • சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரிச் சலுகை.
  • விதிமுறைகளுக்குட்பட்ட பிடித்தங்கள் போக மாதச் சம்பளமாக அல்லது சுய தொழில் மூலம் மாத வருமானமாக 58 ஆயிரத்து 300 ரூபாய் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *