மத்தியப் பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தில் கல்லெறிந்த நபர்களின் வீடுகள் இடிப்பு?!

மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் ஊர்வலம் மீது கற்களை வீசியதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. இதையொட்டி, கலவரம் வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு மதகலவரமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பவன் சர்மா என்ற அதிகாரி ‘தி இந்து’-ஊடகத்துக்கு தெரிவித்ததவது, `கார்கோனில் வன்முறையில் ஈடுபட்ட 45 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர், பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். நில வருவாய் பதிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் சிவராஜ் சிங் சவுகான் அரசு சார்பில் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது, “கார்கோன் வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ள கலவரக்காரர்களிடம் இருந்து இழப்பை அரசு வசூலிக்கும். மத்தியப் பிரதேசத்தில் கலவரக்காரர்களுக்கு இடமில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ராம நவமியன்று இதே மாதிரியான வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கார்கோனில் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *