மதுராந்தகம் அருகே 100 அடி உயரம் கொண்ட அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு.!

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுராந்தகத்தில் 100 உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *