
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கலால் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பு வைத்துள்ளனர். நீதிமன்ற வழக்கின் கண்காணிப்பில் உள்ள இந்த மதுபான பாட்டில்களை உரிய அனுமதியுடன் அழிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கணியம்பாடி அருகேயுள்ள சலமநத்தம் கிராமத்தில் உள்ள காவல் துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை அழிக்க ஏற்பாடு செய்தனர். 8,014 மதுபான பாட்டில்களை கொட்டி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நேற்று அழித்தனர்