
இம்பால்: மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுகிழமை இரவு 11.45 மணிக்கு மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவரின் இடதுகாலில் குண்டுகள் பாய்ந்தன. அவர் லீமாகோங் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்களும் மோதல்களும் நடந்துள்ளன.
ஒற்றுமை நாள் கொண்டாடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி நடந்த கிளர்ச்சியில் உயிரிழந்த 18 பேரின் நினைவாக ஆண்டுதோறும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஒற்றுமை நாள் மணிப்பூரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அங்கு இருக்கும் கிராம மக்களைக் கருத்தில்கொண்டு ராணுவ வீரர்கள் கவனமாக வன்முறையாளர்களை மட்டும் நோக்கி துப்பாக்கியால் சூட்டனர்.
அவர்கள் சின்மங் கிராமத்தில் இருக்கும் மூன்று வீடுகளுக்கும் தீவைத்தனர். பின்னர் ராணுவம் தீயை அணைத்தது. மணிப்பூரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.