
விழுப்புரம்: செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பகுஜன் குரல் செய்தியாளர் பதிக்கப்பட்ட விவசாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது:- எங்கள் கிராமத்தில் பலருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டிய வழியில் நீர்நிலை பட்டா வாங்கி விட்டதாகவும் பாதை கூட விடாமல் ஆக்கிரமிப்பு செய்தும் மணல் கொள்ளை ஈடுபட்டு வந்ததாகவும் இதனை பலமுறை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொலைபேசியில் மனுவாகவும் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் பலமுறை தகவல் அளித்தும் எனக்கு எந்த ஒரு பயணம் அளிக்கவில்லை இதனை தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்பு செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளீர்கள் ஏன் என்றும் உங்கள் கோரிக்கையை சரி செய்து விட்டதாகவும் கூறினார் அதற்கு நான் நீங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தீர்களா என்று கேட்டேன் அதற்கு முறையான தகவல் அளிக்காமல் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நான் தீர்வு காணும் வகையில் சுவரொட்டிகளை அச்சடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்ற முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டினேன் இதனால் தகவல் பரவியது இதனை தொடர்ந்து திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனுடன் சேர்ந்த பலர் என்னை சராசரியாக தாக்கினார் என்னை தாக்கியது மட்டுமல்லாமல் என்னை தாக்கியவர்கள் செஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட நான் செஞ்சி மருத்துவமனை ஊழியர்களால் வீட்டிற்கு அனுப்பி விட்டனர் இதனால் நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் இந்த அரசு ஏழை மக்களுக்கு செய்கின்ற நன்மை இதுதானா என்றும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட எனக்கும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.