மகாராஷ்டிராவில் சாலை வசதி இல்லாததால் இரட்டைக் குழந்தை உயிரிழப்பு.!

மகாராஷ்டிர: பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது பழங்குடியினப் பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திங்களன்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.கனமழை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் கிராமத்திற்குள் வரமுடியாத நிலையில் மார்க்கட்வாடி கிராமத்திலிருந்து பிரதான சாலைக்கு 3 கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு துணியால் கட்டப்பட்ட தற்காலிக ஸ்ட்ரெச்சர் அமைத்து மெயின் சாலைக்கு கொண்டுவந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அந்த பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், குழந்தைகள் பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். முறையான சாலை இருந்திருந்தால், அந்த பெண்ணுக்கு விரைவில் மருத்துவச் சிகிச்சை அளித்து குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார்.பெரும்பாலும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல இயலாத தொலைதூர கிராமங்களில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்திலிருந்து கோடலா பிஎச்சி மருத்துவமனைக்கு மாற்றி வருவதாக மகப்பேறு மருத்துவர் கூறினார்.இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கோவிந்த் போட்கே கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று சாலை அமைக்கும் பணியைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *