
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.ஆகாஷ் ஆனந்த் மற்றும் டாக்டர்.பிரக்யா சித்தார்த்தின் திருமண நிகழ்ச்சி மார்ச் 26 குர்கானில் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய சடங்குகளுக்கு மத்தியில் திருமண நிகழ்ச்சி புத்த முறைப்படி நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி அவர்களின் இளைய சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். திருமணத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் இந்திய முழுவதும் இருந்து 10000 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது மேலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி நொய்டாவில் மார்ச் 28 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.