
போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் குறித்து போப் பிரான்சிஸ் ட்வீட் செய்துள்ளார்.உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால்உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. மக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது.

உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ்,போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து ரஷியா மற்றும் ஆங்கில மொழிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ஒவ்வொரு போரும் இந்த உலகத்தை முன்பு இருந்ததை விட மிகவும் மோசமாக்குகிறது. போர் என்பது அரசியல் மற்றும் மனித நேயத்தின் தோல்வி, வெட்கக்கேடான சரணாகதி, தீய சக்திகளுக்கு முன்னால் ஒரு கடுமையான தோல்வி’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.