
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகஅரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், நாடாளுமன்றத்தில் நேற்றுஅதிபராக முதல்முறை உரையாற்றியரணில், இக்கட்டான சூழலில் மருந்துகளை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.இந்நிலையில், தற்போது இலங்கை அதிபர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் உள்ள அனைத்து சட்டவிரோத கூடாரங்களையும் முகாம்களையும் நாளை(வெள்ளிக்கிழமை)மாலை 5 மணிக்குள் அகற்றிஅப்பகுதியை விட்டு முழுமையாகவெளியேற வேண்டும் என்றும் கலைந்து செல்லாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
I needed to thank you for this good read!! I definitely loved every bit of it. I have you book marked to check out new things you postÖ