
புதுடெல்லி,கொரோனா தொற்று சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்த மத்திய ரிசர்வ் வங்கி முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் “கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி இழப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.52 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். இந்திய பொருளாதாரம் இழப்புகளை சமாளிக்க 2034-35ம் ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.