
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து பல இளைஞர்கள் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்பியதாக 36 யூடியூப் சேனல்கள் மீது 4 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.