பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்க – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்ய மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் கடந்த கொஞ்ச நாட்களாக சமூக வளை தளங்களில் பில்லி சுனியம் – ஏவல் – தொழில் முன்னேற்றம் – செய்வீனை – கடன் தொல்லை – குடும்ப பிரச்சனைகள் – இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என மாந்தீரகவாதிகள் யூடீப் சேனல்களில் பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் யூடீப் சேனல்களின் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்க முடியாமல் முன்னுக்கும் பின் முரனாக மாந்தீரக வாதிகள் பதில் சொல்லி வருது நம்பதக்கத அல்ல .. ஆகவே போலி மாந்தீரக வாதிகளின் பேச்சை நம்பி நேரத்தையும் பொருளாதாரத்தையும் மூளை சலைவைக்கும் ஆளாக வேண்டாம் என பொது மக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்

மாந்தீரகவாதிகள் என்று சொல்லி கொண்டு இருக்கும் இவர்கள் உண்மையான மாந்தீரவாதிகளா அல்லது மாயாஜால வித்தைகளை கற்று கொண்டு அப்பாவி பொது மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்களா என்பதை தமிழக காவல் துறையினர் மாந்தீரிக வாதிகளை உடனடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

ஏனென்றால் சமீபத்தில் கேரளா மாநிலத்தில் போலி மாந்தீரக வாதிகள் மனிதனை மிகவும் கொடூரமாக முறையில் நரபலி கொடுத்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் கேரளா மாநிலத்தில் மனிதனை நரபலி கொடுத்த சம்பவம் போன்று தமிழகத்திலும் மனிதனை நரபலி கொடுக்கும் சம்பவங்கள் நடை பெறமால் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து போலி மாந்தீரக வாதிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும்.மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *