
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மது அருந்துவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊட கங்களில் பரவி வருகிறது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்ற பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆண்கள், பெண்கள் அடங்கிய அந்த மாணவர் குழுவினர், மது போத்தலைத் திறந்து அருந்து கின்றனர். அந்தப் பேருந்தில் மற்ற பயணிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இம்மாணவர்கள் எனவும் நம்பப்படுகிறது.இந்த சம்பவத்தை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா உறுதி செய்துள்ளார். “இது பள்ளிக்கு வெளியே நடந்ததால் காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது முடிவுற்றதும் உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்றார். மேலும் இந்தச் செயலை அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் இதற்கு காரணம் அரசு தான் என் குற்றம் சாட்டியுள்ளனர்.