5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவர்.!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்தரசு. இவரது மனைவி அழகுசுந்தரி. இந்த தம்பதிக்கு சக்திகுமார் என்ற மகன் இருந்தார். இளைஞரான இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் சம்பவத்தன்று கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது கார் ஒன்று மோதியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் மூளைச்சாவு அடைத்துள்ளார்.

பிறகு மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து போலிஸார் உதவியுடன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

இது குறித்துக் கூறிய சக்திகுமாரின் பெற்றோர், “இறந்த எங்கள் மகன் யாருக்காவது உதவியாக இருக்கட்டும் என்ற நோக்கத்திலேயே உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கினோம்” என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *