
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் அரசு மாதிரி பள்ளியில் 10 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 13 பேர் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியரும் சமூக ஆர்வலருமான அகஸ்டின்ராஜா மற்றும் அவருடைய மனைவி மெர்சிடிவோட்டா இணைந்து போர்வை மற்றும் நோட்டு பேனா பென்சில் ரப்பர் ஸ்கேல் ஆகிய பொருள்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வுவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோவர்தனன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் ஊராட்சி மன்ற துணை தலைவர் காமராஜ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து மாணவ-மாணவிகளின் பள்ளிப்படிப்பு செலவினை அனைத்தையும் உடற்கல்வி ஆசிரியரும் சமூக ஆர்வலருமான அகஸ்டின்ராஜாவும் அவர்களது மனைவி மெர்சிடிவோட்டாவும் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

மேலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு உடை போர்வை போன்றவற்றை தொடர்ந்து வழங்கிவரும் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
செய்தியாளர் ப.சிவபெருமான்