
கொரோனா பெருந்தொற்றால் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், டெஸ்ட் கிட்கள் மற்றும் காலியான தடுப்பூசி பாட்டில்கள் என உருவாகியுள்ள மருத்துவக் கழிவுகளால் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதுஅப்படி உருவாகியுள்ள பல்லாயிரக்கணக்கான மருத்துவக் கழிவுகளின் சில பகுதியில் கொரோனா வைரஸ் உயிர் வாழக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கழிவுகள் கொட்டப்படும் அல்லது எரிக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவல் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கவசங்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.87,000 டன் பாதுகாப்பு உபகரணங்கள் கடந்த 2021 நவம்பர் வரையில் ஐ.நா-வின் மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் கிட்களால் 2600 டன் கழிவு மற்றும் தடுப்பூசியால் 1,44,000 டன் கழிவுகள் உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.