
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் தன்னால் பென்சில், மேகி கூட வாங்க முடியவில்லை என்றும், எனது பென்சிலை மற்ற குழந்தைகள் எடுத்துக்கொள்கின்றனர், அம்மாவிடம் பென்சில் கேட்டால் அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? என விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டு அவையின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றன.இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி கிருத்தி துபே, விலைவாசி உயர்வால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.உத்தரப் பிரதேசம் மாநிலம், கனூஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற 6 வயது சிறுமி முதல் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் பெயர் கிர்த்தி துபே, நான் முதல் வகுப்பு படித்து வருகிறேன். நீங்கள் விலைவாசியை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள். நான் உபயோகிக்கும் பென்சில், ரப்பா் (அழிப்பான்) விலையெல்லாம் உயா்ந்துவிட்டது. மேகியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? என் பென்சிலை பிற மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்”.மேலும், நான் விரும்பி சாப்பிடும் மேகியின் விலையும் உயர்ந்துவிட்டது. கடைக்கு சென்று மேகி வாங்கலாம் என்றால் கடைக்காரர் ரூ.7 கேட்கிறார். என்னிடம் ரூ.5 மட்டுமே உள்ளது. இதனால் மேகி வாங்க முடியவில்லை’ நான் என்ன செய்வது என விலைவாசி உயர்வு குறித்து ஹிந்தியில் பிரதமர் மோடிக்கு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தந்தையான வழக்குரைஞர் விஷால் துபே, “சமீபத்தில் பள்ளியில் பென்சிலை தொலைத்தபோது அவளது அம்மா திட்டியதால் எரிச்சலடைந்த என் மகளின் மன் கிபாத் தான்” இந்த கடிதம் என கூறினார்.இது குறித்து சிப்ரமாவ் மாவட்டத்தின் துணை ஆட்சியர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறுமியின் கடிதம் சமூக ஊடகங்கள் மூலம்தான் அறிந்தேன். குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன்.மேலும், சிறுமியின் கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று அவர் கூறினார்.
I needed to thank you for this good read!! I definitely loved every bit of it. I have you book marked to check out new things you postÖ