பெண் வழக்கறிஞருக்கு அலுவலகம் புகுந்து அரிவாள் வெட்டு; திருப்பூரில் பரபரப்பு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்வி குறியா.?

திருப்பூர்: அரசு பெண் வழக்கறிஞராக பணியாற்றி வந்த பெண்ணை அலுவலகத்தில் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர்மகிளாநீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஜமீலாபானு. இவரது மகள் நிஷா. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அலுவலகத்தில் இன்று மகளுடன் ஜமீலா பானு இருந்துள்ளார். அப்பொழுது அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார். கூச்சல் சத்தம் வெளியில் கேட்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். அதனைத் தொடர்ந்து பெண் வழக்கறிஞர் ஜமீலாபானு மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்திய அறிவாளை கைப்பற்றியுள்ள போலீசார் அதனை வைத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரின் முக்கிய சாலையில் பெண்கள் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் தொடரும் நடைபெற்று வரும் கொலை கற்பழிப்பு போன்ற சம்பவங்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *