
விழுப்புரம்: விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜோதி விருச்சிகம் சூப்பர் மார்க்கெட்டில் நேற்று 30/03/2023 அன்று பணி செய்யும் ஊழியர் இப்ராகிம் (வயது 45) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் நெஞ்சை உலுக்கும் வகையில் பரவியது. விழுப்புரம் மேற்கு காவல்துறை இருவரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது. இந்த 2 வாலிபர்களின் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை கேட்டபோது, அதை தடுத்த இப்ராகிமை கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது இந்த 2 வாலிபர்களும் கஞ்சா போதையில் கொலை செய்ததாக சமூக வலை தளங்களில் பரவியது. ஆனால் வாலிபர்கள் கஞ்சா போதையில் இல்லை என காவல்துறை தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் வணிகர் சங்கம் ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இந்த பகுதியில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.