பெண்களுக்கான உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் மீண்டும் தேர்வானார் பிவி சிந்து.!

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக வளம் வரும் பிவி சிந்து, பெண்களுக்கான உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பிவி சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பிவி சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசையில் எச்.எஸ்.பிரணாய் 12வது இடத்திற்கு முன்னேறினார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 12வது இடத்தில் உள்ளார். லக்சயா சென் 8வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *