
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 7 நாள்களில் பெட்ரோல் ரூ.3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்துள்ளது. கடந்த 7 நாள்களில் 6ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.இதனிடையே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இன்று முதல் இரண்டு நாள்கள் பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.