பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான இந்த வரி 500% மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை திரும்பவும் 2014 ஆம் ஆண்டில் இருந்தபடி குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், மத்திய அரசு எரிபொருள்கள் மீதான கலால் வரியை முதலில் குறைக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது 9.48 ரூபாயும், டீசலுக்கு 3.57 ரூபாயும் மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தது.பெட்ரோல் டீசல் விலை உயர்வக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று காணொளி காட்சி மூலமாக பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.தமிழகம், மேற்கு வங்கம், மேகாலயா, ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான VAT வரியை குறைக்கமாட்டோம் என்று அடம் பிடிப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இதுநாள்வரை, கடந்த எட்டு ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துவரும் வரி வகிதங்களின் பட்டியலை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல் – டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.இதில் தமிழக அரசு பெட்ரோல் மீது 22.54 ரூபாயும், டீசல் மீது 18.45 ரூபாயும் மதிப்பு கூட்டு வரியை தற்போது விதித்து வருவதாகவும், இதுவே இந்த வாட் வரி 2014 இல் முறையே 15.67, 10.25 ரூபாயாக இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்து வந்த 32.90 கலால் வரியில் கடந்த ஆண்டு நவம்பரில் 5 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 27.90 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது 21.80 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்டு வருகிறது.இதுவே கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது 9.48 ரூபாயும், டீசலுக்கு 3.57 ரூபாயும் மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான இந்த வரி 500% மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை திரும்பவும் 2014 ஆம் ஆண்டில் இருந்தபடி குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *