பெட்ரோலை விட கம்மி விலையில் பெட்ரோல்! பீர் குடிங்க வண்டி ஓட்டாதீங்க! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சென்னை : இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 106.66, ஒரு லிட்டர் டீசல் ரூ 102.59 க்கு விற்பனையானது. இதுவே பெட்ரோல் டீசல் விற்பனையில் அதிகபட்ச விலையாக இருந்தது.இந்நிலையில் 5 மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது, இந்தியாவில் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.மார்ச் இறுதி வரை சுமார் 130 நாட்கள் எரிபொருட்களின் விலை மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்து வருகிறது. 22ஆம் தேதி முதல் 19 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை ஒரு சில நாட்களை தவிர மீண்டும் மீண்டும் 75 பைசா வீதம் உயர்த்தப்பட்டது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 110.85 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 100.94 க்கும் விற்பனையானது.கடந்த 3 நாட்களாக மட்டும் விலை உயராமல் இருப்பது ஆறுதல் அளித்தாலும், அதன் தாக்கம் தற்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியவாசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை போன்றவை உயர்ந்து வருகின்றனர். மேலும் கேஸ் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலை மாற்றி அமைத்துள்ளனர் வியாபாரிகள்.இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் “alcohowl” என்ற பக்கத்தில் ஒரு பெண் “பீர் இப்போது எரிபொருளை விட மலிவானது” “பீர் குடி வாகனம் ஓட்டாதே” என்ற பதாகையை ஏந்தியபடி போஸ் கொடுத்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி தேசிய பீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.இந்தியாவில் எரிபொருள் விலை மும்பை போன்ற இடங்களில் 120 ரூபாயைத் தொட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பலர் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், மதுப்பிரியர்கள் பீரை பெட்ரொல் டீசல் விலையுடன் ஒப்பிடுகிறார்கள். மேலும் சூடான வெயிலில் பயணம் செய்வதை விடவும், எரிபொருளின் அதிக விலை உயர்வால் மாசுபாட்டை எதிர்கொள்வதை விடவும் ஒரு பீருடன் குளிர்ச்சியாக உட்கார்ந்துகொள்வது நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல. இந்தியாவில் பீர்களின் பிரீமியம் வகை பொதுவாக 650 மில்லி 110 ரூபாயில் இருந்து தொடங்கும் நிலையில், பெட்ரோல் விலை 120 ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *