
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் உள்ள மலர் சந்தைகளில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றனஇந்த நிலையில் தமிழ்நாட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வருகை தரும் பிச்சிப்பூ, மல்லிகையின் வரத்து வெகுவாக குறைந்து அவற்றின் விலை கடும் உயர்வை கண்டுள்ளன.