
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த முட்லூர் கிராமம் அம்பாள்நகரில் வசித்து வரும் செல்வி மற்றும் பழனிஅம்மாள் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் 30/01/22 அன்று நள்ளிரவு 2மணிக்கு டீசல் ஊற்றி தீ வைத்ததாக தெரியவந்தது இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற திராவிட விடுதலை கழகத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா ஆகியோர் நேரில் விசாரித்தபோது பெண் குழந்தைகள் மலம் கழிக்க சென்றிருந்தபோது அந்தப்பக்கம் நிலத்தின் உரிமையாளரான மாற்று சமூகத்தை சேர்ந்தவர் இளைஞர்கள் இரண்டு பேர் வீடியோ எடுத்தாலும்

அதனை கேட்டதால் இதுபோன்று செய்து உள்ளார்கள் என்றும் பாதிக்கப்பட்ட செல்வி மற்றும் பழனியம்மாள் கூறினார்கள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையை வன்மையாக கண்டிப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன சுவரொட்டி ஒட்டி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.