
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் செல்லும் உறவினர்களுக்கு காத்திருப்போர் அறை மற்றும் சிசிடிவி கேமரா இல்லை.
இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கண்ட இடத்தில் அமரும் அவல நிலை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களிடம் களவாணிகள் தொடர்ந்து,பணம், தொலைபேசி ,ஆவணங்கள் போன்ற பொருட்களை திருடி செல்கின்றனர் ..
மருத்துவமனைக்கு வரும் பொது மக்களிடமிருந்து பொருட்களைத் திருடி செல்வது அதிகரித்து வருகின்றது. உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிசிடிவி கேமரா மற்றும் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்திட காத்திருப்போர் அறையும் அமைத்து தர
புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக அரசுக்கும் மாவட்ட சுகாதாரத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.