புதுவையில் பரபரப்பு அழகுநிலைய பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்.!

வேலைக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து அழகுநிலைய பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.அழகுநிலைய பெண் ஊழியர்புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி அழகுமீனா (34). புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு அழகுநிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் கணேசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என தெரிகிறது. இது கணேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் தனது மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.பெட்ரோல் ஊற்றி தீவைப்புகணவரின் எதிர்ப்பை மீறி அழகுமீனா வேலைக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற கணேசன் இன்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மனைவி வேலை செய்யும் அழகுநிலையத்துக்கு சென்று தகராறு செய்துள்ளார்.அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அழகுமீனாவின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டார். உடலில் தீ பற்றியதால் அவர் அலறி துடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அவரது கை மற்றும் உடலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கணவர் கைதுஇதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு தப்பியோடிய கணேசனை கைது செய்தனர். அழகுமீனாவை தீ வைத்து கொளுத்தியபோது அவரது கையிலும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.இதற்கிடையே அழகுமீனா மீது அவரது கணவர் ஆசிட் வீசியதாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *