புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் நாளை முதல் நிறுத்தம்.!

புதுச்சேரி: கடந்த 2021 ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான வணிகபயன்பாட்டு வாகனங்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, முதற்கட்டமாக, மாநில அரசு, யூனியன் பிரதேசங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகள், இதர வாகனங்களை 2023 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னர் இயக்குவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்தது.இந்நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டுவந்த 130 பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயங்கப்பட்டு வந்தன.இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஆர்.டி.ஓ. 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் குமுளிக்கும் இயக்கப்படும் பேருந்துகளும், புதுச்சேரி-காரைக்கால் மற்றும் காரைக்கால்-கோவை இடையே இயக்கப்படும் பேருந்துகளும் நாளை திங்கள்கிழமை(மே 1) முதல் நிறுத்தப்படுகின்றன.15 ஆண்டுகள் கடந்த பழைய பேருந்துகள் நாளை முதல் நிறுத்தப்படுவதால் கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *