புதிய வகை கரோனா: வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம்.!

புதிய வகை கரோனா நோய்த்தொற்று குறித்து வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என தொற்று நோய் தடுப்பு நிபுணர் ராம் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா, பின்னா் உலகம் முழுவதும் பரவியது. அடுத்தடுத்து ஏற்பட்ட கரோனா அலைகளால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. தடுப்பூசி திட்டம் மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக, இந்தியாவில் கரோனா பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்பியுள்ளது. இதுபோன்ற சூழலில், உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.சீனாவில் கடந்த சில வாரங்களாக பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற மிக வேகமாக பரவக்கூடிய புதிய வகை ஒமைக்ரான் கரோனா பாதிப்புசீனாவில் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. இது, தடுப்பூசி செலுத்தியவா்களையும் பாதிக்கும் திறன் கொண்டதால் சீனாவின் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது; மேலும், நாட்டில் கரோனா பரவல் கண்காணிப்பை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.இந்த புதிய வகை பாதிப்பு, ‘குஜராத்தில் இருவா், ஒடிஸாவில் ஒருவா் என இதுவரை 3 பேருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *