
பீஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஜாதிரீதியிலான அரசியலே எப்போதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில் பீஹாரில் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த துவங்கியுள்ளது.’ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியை சந்தித்த பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார். அதை தொடர்ந்து கடிதமும் எழுதினார். இதையடுத்து தேஜஸ்வி யாதவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.’இந்நிலையில் பீஹார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜாஸ்வி, பா.ஜ., உள்ளிட்ட சர்வ கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து முதல்வர் நிதிஷ், லாலு கட்சியின் தேஜாஸ்வி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, நடந்து முடிந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தப்படும் என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். விரைவில் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.