பீஹாரில் செங்கல் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் பலி.!

பாட்னா: பீஹார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம் மோதிஹாரி நகருக்கு அருகே ராம்கர்வா பகுதி உள்ளது. இங்குள்ள நரிர்கிர் பகுதியில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலையில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல் தொழிற்சாலை புகைப்போக்கி மீது மின்னல் தாக்கியது.இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *