
நாகப்பட்டினம்:நாகையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ‘ஊர் சுற்றுவதற்காக பிள்ளைகளுக்கு பைக் வாங்கி தர மாட்டோம்’ என, பெற்றோரிடம் நாகை கலெக்டர் உறுதிமொழி பெற்றார்.நாகை அடுத்த பனங்குடியில், மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பேசிய கலெக்டர், கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம், அரசின் திட்டங்களை எவ்வாறு பெற்று பலனடைவது என்பது குறித்து விளக்கினார்.கிராம சபை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கிராம மக்களுக்கு, சால்வை, புத்தகம், சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து, மாணவர்களின் ஒழுக்க கேடுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.