பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ/ மாணவியர்களுக்கள் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்.!

விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியவாது:- விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ / மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06:12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என திரு.த.மோகன்..இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes. htm#scholarshipchemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும்விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *