பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை! வெளியீட்டார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.!!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

பிற்படுத்தப்பட்டோருக்கு பெரியளவில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது போன்று எதுவும் நடக்கவில்லை.இதனிடையே பிற்படுத்தப்பட்டோருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம் வருமாறு;275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் E-Library அமைக்கப்படும்.பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் 48 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி மாணவியர் தங்க அனுமதி அளிக்கப்படும்.சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தித்தரப்படும்.தையல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) 75 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துத்தரப்படும்.11ஆம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ, மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப்பரிசோதனை செய்வதற்கென வழங்கப்பட்டு வரும் இடைநிகழ் செலவினம் ரூ.1,000-லிருந்து, ரூ.3,000 ஆக 32 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.பிற்படுத்தப்பட்டோருக்கு பெரியளவில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது போன்று எதுவும் நடக்கவில்லை. அமைச்சர் ராஜகண்ணப்பனை பொறுத்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துவிட்டு அண்மையில் தான் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு வந்தார். இதனால் மானியக்கோரிக்கை அறிவிப்புகளை தயாரிப்பதற்கான கால அவகாசம் அவருக்கு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *