பிரதம மந்திரியின் தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்.!

விழுப்புரம்: தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 12.06.2023 (திங்கள்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மற்றும் ஆவின் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

ஐ.டி.ஐ முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். மேலும் ஐ.டி.ஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், 1 முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 8500 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.

எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *