பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்; வெள்ளை மாளிகை கண்டனம்.!

கடந்த ஜூன் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியுடன் கலந்துரையாடினார். மேலும் ஜோ பைடனின் மனைவிக்கு வைர மோதிரத்தை பரிசாகவும் அளித்தார்.

பின்னர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர்கள் மோடியிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலைச் சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சபரினா சித்திக் என்ற பத்திரிகையாளர், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்புக்கு உள்ளாவதாக பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார். இதனை கேட்டதும் மௌனம் காத்த பிரதமர் மோடி, பின்னர் ஒரு பதிலை அளித்தனர். ஜனநாயகம் தங்களது டி.என்.ஏ-வில் உள்ளதாகவும், அனைவரும் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் பதிலளித்தார்.

பிரதமர் மோடியின் தயக்கமும், அவரது பதிலும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு நெட்டிசன்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இணைய தளம் வழியாக ஒன்றிய அரசின் சில அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வாயிலாக பத்திரிகையாளர் சபரினா சித்திக்கிற்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அவர் சார்ந்த இஸ்லாமிய மதத்தை சுட்டிக்காட்டியும், அவரது பெற்றோர்களை வைத்தும் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து ஒரு சார் கும்பல் மட்டும் அவரை தாக்கி இணையத்தில் செய்திகளை பரப்பின. இதையடுத்து இந்த சம்பவத்துக்கு அந்நாட்டின் சக பத்திரிகையாளர் வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பினர். மேலும் ஒரு கேள்வி எழுப்பியதற்காக பெண் பத்திரிகையாளர் மத அடையாளங்களுடன் தரக்குறைவாக விமரசிக்கப்படுவதாகவும், இதுகுறித்து வெள்ளை மாளிகை என்ன சொல்ல விரும்புகிறது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வலுத்த கண்டனங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுவதாவது, “பெண் பத்திரிகையாளர் இணையவழியாக ட்ரோல் செய்யப்படுவது, கேலிக்குள்ளாக்கப்படுவது குறித்து வெள்ளை மாளிகைக்கு தெரியவந்துள்ளது. பத்திரிகையாளர் மீது இணையவெளி வன்மம் ஜனநாயகத்தின் மாண்பையே சிதைக்கும் செயல். பத்திரிகையாளர்கள் அவர்களது பணியை செய்வதற்காக மிரட்டப்படுவதை ஏற்கவே முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

“இதனிடையே மிரட்டல், ட்ரோல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண் பத்திரிகையாளர் சபரினா சித்திக்கை, மத அடையாளங்களுடன் விமர்சித்து வருபவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தனது அடையாளம் குறித்து கேள்வி எழுப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கிரிக்கெட் போட்டிகளின்போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவான தனது பழைய ட்விட்டை அவர் பகிர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *