
ராஜஸ்தானில் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா ஷர்மாவும் தனது கணவரும் இணைந்து நடத்தி வரும் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு Dr.அர்ச்சனா பிரசவம் பார்த்தப் போது,அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட சில கோளாறுகளால், உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்தது, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக Dr.அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான Dr.அர்ச்சனா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “எனது கணவரையும், குழந்தைகளையும் தொந்தரவு செய்யாதீர்கள். நான் அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ சிகிச்சை அளிக்கவில்லை. கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருந்த அசவுகரியங்களால்தான் அவர் உயிரிழக்க நேர்ந்தது. என் தற்கொலைக்கு பிறகாவது மருத்துவர்களை இதுபோன்று நடத்தமாட்டீர்கள் என நம்புகின்றன. அப்பாவி மருத்துவர்களை விட்டு விடுங்கள்,” என எழுதி விட்டு மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவப் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்டான அர்ச்சனாவின் தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.