பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரம் ரத்து – புதுவை தேர்தல் ஆணையம்.!

புதுச்சேரி: புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அரசியல் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் வாங்கி இருக்க வேண்டும்,அல்லது சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.இந்த அடிப்படையில் 2009-ம் ஆண்டு பா.ம.க. புதுவை மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.இதில் 2011-ல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் 2.48 சதவீதம்தான் வாக்கு வாங்கியது.2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க. வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 3.17 சதவீதம் வாக்கு பெற்றிருந்தது.2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.இந்ததேர்தலில் 0.71 சதவீதம்தான் வாக்குகள் பெற்றிருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை.இதையடுத்து 6ஏ விதிகளின் படி விளக்கம் கேட்டு பா.ம.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *