
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தன்னை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி புகார் கொடுக்்க சென்ற சிறுமியை, காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரும் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை கடந்த மாதம் 22ம் தேதி 4 பேர் கடத்தி சென்றனர். போபால் அழைத்துச் சென்ற அவர்கள், சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்து பாலி காவல் நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சிறுமி புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் சென்று இது குறித்து முறையிட்டுள்ளார். அவர்களது தலையீட்டின் பேரில் சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து வருகின்றனர்.
வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உத்திரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேல் சாதியினர், காவல் துறை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரால் நசுக்கப்படுகிறார்கள்எனக் குற்றச்சாட்டு உள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு 18 நிமிடத்துக்கும்ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு 28,000 மேற்பட்ட அத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.