
திருச்சி: சென்னையில் இருந்து 620 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயலின் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர். இந்த புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிப்பு ஏற்படுத்தலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.