பாஜக ரௌடிகளின் தூண்டுதலில் என்னையும் என் தங்கையும் ஆபாசமாக பேசி அராஜகம்; கோவில்பட்டி காவல் துறையினரை கண்டித்து 2வது நாளாக நந்தினி சகோதரிகள் உண்ணாவிரத போராட்டம்.!

கோவில்பட்டி: தமிழகத்தில் பல்வேறு மத்திய மாநில அரசுகளின் சமூக அவலங்களை ஆங்காங்கே துண்டு பிரசுரங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் சமூக செயல்பாட்டாளர் நந்தினி மற்றும் அவர்களின் சகோதரர் நிரஞ்சனா ஆகியோர்கள் மீது கோவில்பட்டி காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்ந்து இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களின் கோரிக்கையான மத்திய பாஜக மோடி அரசின் 10.72 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழலை கண்டித்தும்,மோடியின் நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள பல லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்து அப்பணத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரக் கோரியும். டாஸ்மாக் உட்பட அனைத்து போதைப் பொருட்களையும் தடை செய்யக் கோரியும். நேற்று( 18.12.2022) மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் மக்களிடம் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு வந்த பாஜக ரௌடி கும்பல் எங்களிடம் தகராறு செய்து தாக்க முயன்றது. அங்கிருந்த பொது மக்கள் பாஜக ரௌடிகளை கண்டித்ததால் அங்கிருந்து சென்ற அந்த பாஜக கும்பல் காவல்துறையினரை அழைத்து வந்து
எங்களை கைது செய்யச்சொல்லி நிர்பந்தம் கொடுத்தனர்.

திமுக அரசின் காவல்துறை பாஜக
ரௌடி கும்பலின் எடுபிடிகளாக செயல்பட்டு எங்களை தாக்கி எங்களிடமிருந்த பிரசுரங்களையும் பதாகையையும் பறித்து வலுக்கட்டாயமாக எங்களை கைது செய்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் உட்பட ஆண் காவலர்களும் பெண் காவலர்களும் மிக அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் எங்களை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மிக அராஜகமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டனர்.

காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும் எங்களை தாக்க முயன்ற பாஜக ரௌடிகளை கைது செய்யக் கோரியும் காவல்நிலையத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினோம். இந்நிலையில் காவல்துறையினர் இரவு 10 மணியளவில் எங்களை பலவந்தமாக ஒரு ஆட்டோவில் ஏற்றி கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து நேற்று இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இன்று (18.12.2022)
2-வது நாளாக அங்கேயே போராட்டத்தை தொடர்கிறோம்.

பாசிச பாஜக-RSS கும்பலின் ரௌடித்தனத்துக்கும் திமுக அரசின் காவல்துறை அடக்குமுறைக்கும் ஒரு போதும் அடிபணிய மாட்டோம்.

மக்கள் விரோத ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம். என்றும் சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *