
உத்தரப்பிரதேசம்: மொராதாபாத் மாவட்டம் பரெய்லியை சேர்ந்த 15 வயதான சிறுமி பக்கத்துக்கு கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 5 பேர்கொண்ட கும்பல் சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று மறைவான பகுதியில் வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.வலி தாங்காமல் கதறிய சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு யாரோ வருவதை போல உணர்ந்த கும்பல் சிறுமியின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளது. உதவிக்கு யாருமே இல்லாததால் சிறுமி நிர்வாணமாகவே மொராதாபாத் – தகுருத்வாரா சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை நடந்து வந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் யாரும் சிறுமிக்கு உதவவில்லை. மாறாக சிறுமியை செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வைரல் செய்துள்ளனர்.உறுப்புகளில் ரத்த கசிவுடன் பிறந்த மேனியாக வீட்டுக்கு வந்த சிறுமியை கண்ட பெற்றோர் கதிகலங்கி துடித்துள்ளனர். நடந்தவற்றை அனைத்தையும் சிறுமி கதறி அழுது விவரித்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் மாமா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வரவே, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னரே வழக்கு பதிவு செய்து போலீசார் எப்ஐஆர் போட்டுள்ளனர். இந்த வழக்கில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் எஞ்சிய குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது மேலும் பாஜக ஆலும் மாநிலத்தில் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை எதிர் கட்சியாக இருக்கும் சமாஜ் வாதி கட்சி எதிர்த்து கேள்வி கேட்பதில்லை எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.