பள்ளி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீன்.!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூர் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 5 பேருக்கு நிபந்தனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக, பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமினில் வந்தனர். இதையடுத்து இன்று(ஆக.,29) பள்ளி முதல்வர், தாளாளர்,செயலாளர் ஆகியோர் மதுரையிலும், ஆசிரியர்கள் இருவரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உத்தரவிட்டது.மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. படிப்பில் சிக்கல்களை சந்தித்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்கு ஆசிரியர்கள் சிறை வாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *