
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி இவரது மகன் செல்வம் (21). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் காதல் செய்வதாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் அந்த பள்ளி மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் செல்வத்தை கைது செய்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.