பல மனுக்கள் கொடுத்தும் ஏழைக்கு ஒரு வீடு தர மாட்டாங்களா என பள்ளி குழந்தைகளுடன் கண்ணீருடன் தம்பதியினார் பேட்டி; நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்.!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் கலைச்செல்வி இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்து வருகிறார்கள் இவர்களுக்கு
சத்தியமூர்த்தி, கவிராஜ்,விக்னேஷ் என்ற
மூன்று ஆண் குழந்தைகள் உள்ளது
இவர்களின் கூரை வீடு தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்த நிலையில் தனது ஏழ்மையின் காரணமாக புதிய வீடு கட்டுவதற்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்

இதனால் அரசு வழங்கும் இலவச வீடுகள் கேட்டு பஞ்சாயத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் என அனைவரிடமும் பல மனுக்கள் கொடுத்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அலைந்து வருவதாகவும் பள்ளி மாணவர்களுடன் கண்ணீர் விட்டு தம்பதியினர் கூறி வருகின்றனர். மேலும் தற்போது குடியிருப்பதற்காக
தார்ப்பாய் கொண்டு குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம்
நாங்கள் நிம்மதியாக தூங்கி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிறது ஒரு ஏழைக்கு வீடு தர மாட்டார்கள் என கண்ணீருடன் தம்பதியினர் கூறுகின்றனர்.
மேலும் மழைக் காலங்களில் தார்ப்பாய் குடிசைக்குள் மழை நீர் புகுந்து விடுவதால் நாங்கள் தினமும் உட்கார்ந்தபடியே தூங்குவது போல் குழந்தைகளும் தூக்காமல் விடிய விடிய உட்கார்ந்தே இருப்பாங்க என கண்ணீருடன் கதறி அழுதனர்.
எனவே எங்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஐயா ஒரு வீடு வழங்க வேண்டும் என கண்ணீருடன் தம்பதியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா.? என்று அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *